பட்ஜெட்டுக்கு தயாராகும் புதிய நாடாளுமன்ற கட்டடம்... உள்ளே எப்படி இருக்கு பாருங்க...!

வரும் ஜனவரி 31ஆம் தேதி நடைபெற இருக்கும்,  பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின், கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் படங்கள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன.

  • Jan 21, 2023, 07:54 AM IST
1 /6

புதிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 1, 224 பேர் அமரக்கூடிய வசதியும், நான்கு மாடிகள் உயரமும் இருக்கும். முன்மொழியப்பட்ட கட்டமைப்பில் பெரிய அரங்குகள், ஒரு நூலகம், ஏராளமான பார்க்கிங் மற்றும் கமிட்டி அறைகள் இருப்பது தெரிகிறது. (புகைப்படம்: centralvista.gov.in)  

2 /6

தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்துடன்தான், புதிய நாடாளுமன்ற கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றது. இந்த திட்டம், 2022 நவம்பருக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பணிகள் தாமதாமாகியுள்ளது. (புகைப்படம்: centralvista.gov.in)  

3 /6

புதிய மக்களவை அரங்கு, தற்போது உள்ளதை விட மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். இது 888 இருக்கைகளைக் கொண்டிருக்கும். இது மயில் வடிவில் வடிவமைக்கப்பட்ட கட்டடமாகும்.  (புகைப்படம்: centralvista.gov.in)  

4 /6

புதிய மாநிலங்களவை அரங்கு, தற்போதுள்ளதை விட பெரியதாக இருக்கும். இது 384 பேர் அமரக்கூடியது. இது தாமரை வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. (புகைப்படம்: centralvista.gov.in)  

5 /6

புதிய நாடாளுமன்றத்திற்குள் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அதிநவீன அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. (புகைப்படம்: centralvista.gov.in)  

6 /6

புதிய மற்றும் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் வரைபடம். புதிய கட்டமைப்பும், தற்போது உள்ள நாடாளுமன்றத்தின் கட்டடமும் ஒருங்கிணைந்து செயல்படும். (புகைப்படம்: centralvista.gov.in)