புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் குடியரசு தலைவரால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாகவும் பல எதிர் கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த, போராட்டத்திற்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, இந்திய குடியரசு தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா தொடர்பான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த மனு விசாரணைக்கு தகுதியற்றது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. இதுபோன்ற மனுக்களை விசாரிப்பது எங்கள் வேலை இல்லை. ஏன் அப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது என உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த மனுவில், மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமர் திறந்து வைத்தால், அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என, மனுவில் கூறப்பட்டிருந்தது.
புதிய நாடாளுமன்றம் தொடர்பான சர்ச்சை நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் தாக்கல் செய்த மனுவில், குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த அங்கம் என்று கூறப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில், திறப்பு விழாவுக்கு அவரை அழைக்காதது அரசியல் சாசனக் கோட்பாடுகளுக்கு எதிரானது. இது தொடர்பாக மக்களவை செயலகத்துக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஜனநாயகத்தின் ஆலயம்! இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு சுற்றுலா செல்வோமா?
புதிய பாராளுமன்றம் பதவியேற்பு விழாவில் அரசியல் குழப்பம்
புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை 20 ஆகவும், ஆதரவு கட்சிகளின் எண்ணிக்கை 25 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆதரவாளர்களில் NDA வின் 18 கட்சிகளும் NDA கூட்டணியில் அல்லாத 7 கட்சிகளும் அடங்கும்.
மே 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
10 டிசம்பர் 2020 அன்று, பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இப்போது மே 28 அன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் தயாராக உள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 4 மாடிகளைக் கொண்டது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப பல வசதிகளை கொண்டுள்ளது. இதுதவிர இருக்கை வசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமர முடியும். புதிய பாராளுமன்ற கட்டிடம் பழைய பாராளுமன்றத்தை விட 17,000 சதுர மீட்டர் பெரியதாக உள்ளது.
மேலும் படிக்க | பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28 அன்று திறந்து வைப்பார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ