முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, காரைக்குடி, மும்பை, டெல்லி நொய்டா உள்பட 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மத்திய நிதியமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் இன்று சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ., சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சிபிஐ சோதனை தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறியதாவது:-
சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என ப.சிதம்பரம் குற்றம் சாட்டிஉள்ளார்
சென்னை நுங்கம் பாக்கத்தில் மற்றும் காரைக்குடியில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
மொத்தம் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மத்திய நிதியமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் இன்று சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ., சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் இன்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முன்னால் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
தமிழக அரசு தரப்பில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எந்தவித முடிவும் எடுக்கவில்லை. எனவே ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு செய்தனர்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.9000 கோடிக்கும் அதிகமான கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், நெருக்கடி அதிகரித்ததால் கடந்த ஆண்டு இந்தியாவை விட்டுச் சென்றார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்ததையடுத்து, அமலாக்கத்துறையானது பண மோசடி வழக்கு பதிவு செய்து, அவரது சொத்துக்களை முடக்கியுள்ளது. அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.மேலும் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சாரதா நிதி நிறுவன மோசடி போன்று ரோஸ் வேலி நிதி நிறுவனத்திலும் பல கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ரோஸ் வேலி நிதிநிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதீப் பண்டோபாத்யாய் சிபிஐ கைது செய்தது. இதேபோல் திரிணாமுல் காங்கிரசின் எம்பி தபஸ் பால் சமீபத்தில் சிபிஐ கைது செய்தது.
சாரதா நிதி நிறுவன மோசடி போன்று ரோஸ் வேலி நிதி நிறுவனத்திலும் பல கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ரோஸ் வேலி நிதிநிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதீப் பண்டோபாத்யாய் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரை சிபிஐ கைது செய்தது.
பணத்தை பதுக்கி வைத்திருந்ததால் சென்னையில் சேகர் ரெட்டியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சேகர் ரெட்டி என்பவர் அரசு துறைகளின் முக்கிய ஒப்பந்தங்களைப் பெற்று பணிகளை மேற்கொண்டு வந்தார். அவரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், 132 கோடி ரூபாய் மற்றும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறி முதல் செய்யப்பட்டது. அதில், 35 கோடி ரூபாய்க்கு, புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால், சி.பி.ஐ., அமைப்பு விசாரணையில் இறங்கியது. அவர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிபிஐயின் தற்போதைய இயக்குநராக உள்ள அனில் சின்ஹாவின் பதவிக்காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் சிபிஐ இயக்குநராக ராகேஷ் அஸ்தானா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்ப்ரேர் விமான ஒப்பந்ததில் லஞ்சம் பணம் 208 மில்லியன் யுஎஸ் டாலர் கைமாறி இருப்பதாக சிபிஐ எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் என்.ஆர்.ஐ பாதுகாப்பு ஆலோசகர் விபின் கன்னாவை முக்கிய குற்ற்றவாளி என்று சிபிஐ கூறியுள்ளது.
திருப்பூரில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
எம்.ஜி.ஆ-ன் வளர்ப்பு மகள் சுதா. இவரது கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு மர்ம கும்பல் அவரது காரை வழிமறித்து விஜயனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது. இதுகுறித்து அபிராமபுரம் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2 வருடமாக ஜவகர்பாத் பகுதியில் உள்ள 260 ஏக்கர் பூங்காவை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் கோர்ட்டு உத்தரவின் பெயரில் போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அப்போது கலவரம் வெடித்தது. இந்த மோதலில் 2 போலீசார் அதிகாரிகள் உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர். பல பேர் காயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.