மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.மேலும் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்ற போது பிப்ரவரி 2-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி அறிவித்திருந்தார்.
இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் நீதிபதிகள் இந்த வழக்கு சம்பந்தமான தீர்ப்பை வழங்கினர்.
தீர்ப்பில் கூறியதாவது:-
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர். போதிய ஆதாரம் இல்லாததால் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மூன்று பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிப்பு. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் கூறினார்கள்.