விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவீண் தொகாடியா கடந்த 2015-ஆம் ஆண்டில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
ஒரு கோழியை பாலியல் ரீதியாக கொலை செய்த குற்றத்திற்காக பாக்கிஸ்தான் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பாக்கிஸ்தானின் ஹாப்சாபாத்தை சேர்ந்த பஞ்சாபில் இக்கொடுரம் நிகழ்ந்துள்ளது!
கந்துவட்டி புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலாவை நேற்று கைது செய்தனர். கைதான இவர் இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டில் ஆஜரான இவர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சென்னையை சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா. சில நாட்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ வைத்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டனர்.
கந்துவட்டி புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில் பிரபல கார்ட்டூனிஸ்டை அவதூறு பரப்பும் வகையில் இருந்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா. சில நாட்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ வைத்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.
ஐதராபாத்தில் பெண் பயணி ஒருவர் முன்பு சுய இன்பம் கொண்ட உபர் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி பகுதியில் வசித்து வருபவர் உமா ஷர்மா டெல்லியை சேர்ந்தவர். அண்மையில் ஐதராபாத்தில் குடியேறியுள்ளார்.
கடந்த 19-ம் தேதி அதிகாலை அவர் உபர் கார் மூலம் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆள் நடமாட்டமே இல்லாத ரோட்டை அடைந்ததும் டிரைவர் வாகனத்தின் வேகத்தை குறைத்துவிட்டு உமாவை கண்ணாடி வழியாக பார்த்துள்ளார்.
பின்னர் அவர் உமாவை பார்த்துக் கொண்டே சுய இன்பம் அனுபவித்துள்ளார். இதை பார்த்து உமா அலறிய பிறகே அவர் காரை நிறுத்தியுள்ளார்.
டெல்லியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 13-ம் தேதி அன்று டெல்லியில் தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 31 வரை பட்டாசுக் கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஒளி மற்றும் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தில், டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள என்சிஆர் பகுதிகளில் அக்டோபர் 31 வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து.
சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர் பாட்ஷாவை இன்று போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் கிராமத்தை சேர்ந்த, ஆரோக்கியராஜ் என்பவரிடம் கோவில்களில் இருந்து திருடப்பட்ட 2 பஞ்ச லோக சிலைகள் இருந்தன. வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு, அவற்றை விற்க முயற்சித்தார்.
இதை அறிந்த 2 போலீசார் சிலைகளை கைப்பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த சிலைகளை, 15 லட்சம் ரூபாய்க்கு, கடத்தல்காரரிடமே போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷா விற்று விட்டதாக புகார் எழுந்தது. மேலும் இது குறித்து சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
ராமநாதபுரம் மண்டபம் பேருந்து நிலையத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 20கிலோ கஞ்சா போட்டலங்களுடன் வந்த இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Ramanathapuram (Tamil Nadu): Police arrested two people and seized 20 kg Cannabis worth approx Rs 1 lakh from Mandapam bus stand pic.twitter.com/uVojao14PZ
— ANI (@ANI) September 6, 2017
நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடலில் மின்பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் 10 படகுகளையும் 32 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளனர்.
இதேபோல, ஜகதாபட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேரும் கைதாகியுள்ளனர் என்றும் அவர்களது 5 படகுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம், நாகை மாவட்டங்களை சேர்ந்த 32 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சேலம் செல்லும் வழியில், கோவை மாவட்டம் கனியூரில் மு.க.ஸ்டாலின் கைது.
முன்னதாக சேலம் கட்சராயன்குட்டையில் உள்ள ஏரியை தூர்வாரும் பணிகளை பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பார்வையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2 நாட்களாக ஏரிப் பகுயில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனிடையே மு.க.ஸ்டாலின் சேலம் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
புதுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியண்ண அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகிய 3 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டு கொண்டிருந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்ததாக எம்.எல்.ஏ. ரகுபதி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.