திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது!

Last Updated : Jul 27, 2017, 12:47 PM IST
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது! title=

சேலம் செல்லும் வழியில், கோவை மாவட்டம் கனியூரில் மு.க.ஸ்டாலின் கைது.

முன்னதாக சேலம் கட்சராயன்குட்டையில் உள்ள ஏரியை தூர்வாரும் பணிகளை பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பார்வையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2 நாட்களாக ஏரிப் பகுயில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனிடையே மு.க.ஸ்டாலின் சேலம் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

சேலம் செல்வதற்காக தற்போது விமானம் மூலம் கோவை சென்ற மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சேலம் செல்லும் வழியில் சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு  சேலம் செல்ல அனுமதி இல்லை எனக் கூறினார்.

அப்போது, முறையான காரணத்தை போலீசார் கூறவில்லை என்று குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின். தடையை மீறி சேலம் செல்லவுள்ளதாக தெரிவித்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.

மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து சேலத்தில் திமுக தொண்டர்கள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.

Trending News