அகர்தலா: இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்த, இரண்டு குடும்பங்கள் எட்டு ரோஹிங்கியார்கள் இன்று(புதன்) மேற்கு திரிபுராவில் கைது செய்யப்பட்டனர்.
அகர்தலாவுக்கு வடக்கே 12 கி.மீ., தூரத்தில் உள்ள கெய்ர்பூரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களில் இரு பெண்களும் நான்கு குழந்தைகளும் உட்பட மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு பின்னர் அவர்கள் போடஜுன் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், "இவர்களின் இருப்பு பற்றி இதுவரை சரியான விவரங்கள் வரவில்லை" என தெரிவித்துள்ளனர்.
Tripura: Eight Rohingyas including four minors arrested by Police in Khayerpur, on the outskirts of Agartala pic.twitter.com/orLjpbodQp
— ANI (@ANI) November 29, 2017
மேலும் இவர்கள் வங்காளதேசம் வழியாக திரிபுரா மற்றும் ஒரு சில வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோதமாக நுழைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது இவர்கள் சட்ட மற்றும் பாதுகாப்பு முறைகளைத் அடுத்து வங்காளதேசத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.