Archery World Championships: பெர்லினில் நடந்து வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்த ஜோதி சுரேகா வென்னம், அதிதி ஸ்வாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகிய இந்திய மூவரும் ஆகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை வரலாற்றை எழுதினர்.
Archery World Cup 2023: வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 1ல் நடந்த ஷூட்-ஆஃப் போட்டியில், இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றுள்ளது
Indian archery recurve team: புதிய பயிற்சியாளரை இந்திய வில்வித்தை சங்கம் நியமித்துள்ளது! உலகக் கோப்பை போட்டிகள் எதிர்வரும் நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது
உலகக் கோப்பையில் இந்தியா மகளிர் ரீகர்வ் அணி தங்கம் வென்றது. பெண்கள் தனிநபர் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கப்பதக்கம் வென்றார். நேற்று பாரிஸில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் தனிநபர் பிரிவில் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார்...
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை தொடர் போட்டியில் அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ, அமான்ஜித் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் வில்வித்தை அணி அரையிறுதியில் 232-க்கு 230 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை வென்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்று நடந்த போட்டியில் இந்திய அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் தீபிகாகுமாரி ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியைத் தழுவினார்.
உலக கோப்பை வில்வித்தை தொடர் சீனாவின் ஷாங்காயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 21 வயதான இந்தியாவின் தீபிகா குமாரி உலக சாதனையை சமன் செய்து அசத்தினார்.
மகளிர் ரீகர்வ் ரேங்கிங் சுற்றில் களமிறங்கிய தீபிகா, 686/720 புள்ளிகள் குவித்து தென் கொரியாவின் கி போபே படைத்த சாதனையை சமன் செய்து அசத்தினார். தீபிகாகுமாரி ஏற்கனவே ரியோ ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டியின் தனிநபர் மற்றும் குழு பிரிவில் தகுதி பெற்றுள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் ஏற்கனவே தொடர்ந்து நடந்த உலக கோப்பை வில்வித்தை தொடர்களில் வெள்ளிப் பதக்கம் மூன்று முறை 2011, 2012, 2013 வென்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.