Sports News: உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியா மகளிர் அணி தங்கம் வென்றது

உலகக் கோப்பையில் இந்தியா மகளிர் ரீகர்வ் அணி தங்கம் வென்றது. பெண்கள் தனிநபர் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கப்பதக்கம் வென்றார். நேற்று பாரிஸில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் தனிநபர் பிரிவில் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார்...  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 27, 2021, 07:13 PM IST
  • உலகக் கோப்பையில் இந்தியா மகளிர் ரீகர்வ் அணி தங்கம் வென்றது
  • பெண்கள் தனிநபர் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கப்பதக்கம் வென்றார்
  • பாரிஸில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் தனிநபர் பிரிவில் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார்
Sports News: உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியா மகளிர் அணி தங்கம் வென்றது title=

பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பை நிலை 3 இல் தீபிகா குமாரி, கோமலிகா பாரி, மற்றும் அங்கிதா பகத் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர்  அணி தங்கப்பதக்கம் வென்றது.

பாரிஸில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பை நிலை 3 இல் பெண்கள் தனிநபர் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கப்பதக்கம் வென்றார். நேற்று பாரிஸில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் தனிநபர் பிரிவில் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார். வில்வித்தைப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்கப் பதங்களை குவித்து வருகின்றனர்.

இந்த அணி இறுதிப் போட்டியில் மெக்ஸிகோவை 5-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.  இதையடுத்து, இந்தியா மகளிர் ரீகர்வ் அணி 2021 இல் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. "பாரிஸில் இந்தியா தங்கம் கைப்பற்றியது" என்று உலக வில்வித்தை அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் செய்தியில் செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை நிலை 3 போட்டி, ஒலிம்பிக் தகுதிப் போட்டி அல்ல. சனிக்கிழமையன்று, பாரிஸில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பை மூன்றாம் கட்டத்தில் அபிஷேக் வர்மா தனிநபர் உலகக் கோப்பை தங்கத்தை வென்றார். இது சர்வதேச அளவில் அவர் பெறும் இரண்டாவது தங்கப் பதக்கமாகும்.

அமெரிக்காவின் கிரிஸ் ஷாஃப் (Kris Schaff) என்பவரை வென்று அபிஷேக் தங்கம் வென்றார், வாழ்த்துக்கள்! என இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India) டிவிட்டர் செய்தி வெளியிட்டது. கடந்த வாரம், பாரிஸில் நடந்த இறுதி ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் வெளியேறிய பின்னர் இந்திய மகளிர் வில்வித்தை அணி டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான வாய்ப்பை தவறிவிட்டது.

இந்திய அணியின் மூவரும் 6-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வென்றனர். தகுதிச் சுற்றில், இந்தியாவும் மெக்ஸிகோவும் புள்ளிகளை தவறவிடவில்லை.

Also Read | Best Captain: சிறந்த கேப்டன் ரோஹித் சர்மாவா? விராட் கோலியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News