உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த 3 பெண்கள்

Archery World Championships: பெர்லினில் நடந்து வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்த ஜோதி சுரேகா வென்னம், அதிதி ஸ்வாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகிய இந்திய மூவரும் ஆகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை வரலாற்றை எழுதினர்.

இந்திய வீராங்கனைகள் மூவரும் 235-229 என்ற புள்ளிக் கணக்கில் மெக்சிகோ அணியான டாஃப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் ஜியோன் மற்றும் ஆண்ட்ரியா பெசெரா ஆகியோரை வெற்றிக் கொண்டனர்

1 /10

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் இன்று கிடைத்தது

2 /10

பெர்லினில் நடந்து வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்த மூவர் அணி: ஜோதி சுரேகா வென்னம், அதிதி ஸ்வாமி மற்றும் பர்னீத் கவுர்   

3 /10

இந்த வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது.  

4 /10

ஒன்பது வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலங்களுடன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவின் முதல் தங்கமும் சேர்ந்து 12 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது

5 /10

பாரிஸில் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் இருப்பதால், இந்தியாவின் இந்த வெற்றி உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது

6 /10

ஒரு தனித்துவமான சாதனையில், ஜோதி வென்னம் தனது ஏழாவது பதக்கத்தை வென்றார், இவர் இதற்கு முன் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் நான்கு வெண்கலம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார். 

7 /10

235-229 என்ற புள்ளிக் கணக்கில் மெக்சிகோ அணியான டாஃப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் ஜியோன் மற்றும் ஆண்ட்ரியா பெசெரா ஆகியோரை இந்திய வீராங்கனைகள் தோற்கடித்தனர்

8 /10

அரையிறுதியில் சாரா லோபஸ் தலைமையிலான கொலம்பிய மகளிர் அணியை 220-216 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது இந்திய மூவர் அணி

9 /10

ஜோதி சுரேகா வென்னம் தலைமையில் அதிதி ஸ்வாமியுடன் இணைந்து சாதித்த பர்னீத் கவுர்

10 /10

அதிதி ஸ்வாமியுடன் இணைந்து சாதித்த பர்னீத் கவுர் மற்றும் ஜோதி சுரேகா வென்னம்