சென்னையில் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி அண்ணா சாலையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது என்பதை நமது செய்தியாளர் தமிழரசன் விளக்க உள்ளார். அவரிடம் பேசலாம்.
சென்னை அண்ணா சாலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் பழைய கட்டடம் இடிக்கப்பட்டதில், பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா சாலையில் நந்தனம் சிக்னல் அருகில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நாளை முதல் 10 நாட்களுக்கு சோதனை முறையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில், மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில், விரிசல் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பள்ளம் உருவான பகுதியில் தான் 10 அடி நீளம் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விரிசல் ஏற்பட்டுள்ளது பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாக யாரும் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு வடபழனி சென்ற சென்னை மாநகர பஸ்சும், இரு காரும் சிக்கிக்கொண்டன.
சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரெயில் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, பிறகு மூடப்பட்டது.
ஆனால் ஏற்கனவே பள்ளம் விழுந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில், அமெரிக்க தூதரகம் அருகே இந்த பள்ளம் உருவானது. அப்போது, அந்த இடத்தில் சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்தும், ஒரு காரும் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்க தூதரகம் மற்றும் சர்ச் பார்க் பள்ளிக்கு இடையே ஏற்பட்ட இந்த பள்ளத்திற்கு காரணம் தெரியாமல் மக்கள் அச்சமடைந்தனர்.
பிறகு, மெட்ரோ ரெயில் பணிகளின் தாக்கத்தால் சிமெண்ட் கலவை கசிவால் இந்த பள்ளம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால், அண்ணா சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸார் சம்பவ பகுதிக்கு விரைந்து போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.