மறைந்த தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!
மறைந்த தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் இன்று
பேரறிஞர் அண்ணா அவர்களின் 110 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று, சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். pic.twitter.com/S1EpZ52Amo
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 15, 2018
கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் பெருந்திரளாக கலைந்துக்கொண்டனர்.
முன்னதாக, தமிழக காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் 1208 பேருக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதன்படி, காவல்துறையில் 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் 10 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் 10 அலுவலர்களுக்கும் முதல்வரின் அண்ணா பதக்கங்கள் இன்று வழங்கப்படுகிறது.