சென்னை திடீர் பள்ளத்தில் சிக்கி பேருந்து, கார் கவிழ்ந்தது

Last Updated : Apr 9, 2017, 03:48 PM IST
சென்னை திடீர் பள்ளத்தில் சிக்கி பேருந்து, கார் கவிழ்ந்தது title=

சென்னை அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு வடபழனி சென்ற சென்னை மாநகர பஸ்சும், இரு காரும் சிக்கிக்கொண்டன. 

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரெயில் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, பிறகு மூடப்பட்டது.

ஆனால் ஏற்கனவே பள்ளம் விழுந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில், அமெரிக்க தூதரகம் அருகே இந்த பள்ளம் உருவானது. அப்போது, அந்த இடத்தில் சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்தும், ஒரு காரும் பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போக்குவரத்தை மாற்றியமைத்தனர். சம்பவ இடத்தில் மீட்பு படையினர் குவிந்துள்ளனர். பஸ்சை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  பேருந்து மற்றும் காரில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் சிலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி  உள்ளது.

Trending News