370 வது சட்டபிரிவை நீக்கிய பிறகு நாட்டின் எந்த பகுதியில் இருக்கும் குடிமகனும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும். முதலில் காஷ்மீரிகள் மட்டுமே நிலம் வாங்க முடியும். தற்போது அனைவரும் வாங்க முடியும்.
பாஜக தரப்பில் அதிமுக-வுக்கு ஒரு இடம் தான் கிடைக்கும் என கூறப்பட்டு இருப்பதால், மோடி அமைச்சரவையில் ரவீந்திரநாத் குமாரா? அல்லது வைத்திலிங்கமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ள "சிந்த்" என்ற வார்த்தைக்கு பதிலாக வடகிழக்கு இந்தியாவை குறிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் MP போரா தனி நபர் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்!
டெல்லி மேல்-சபையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், மசோதாவில் திருத்தத்தை வற்புறுத்த வேண்டாம் என்று காங்கிரசுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.
பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் இன்று(வெள்ளிக்கிழமை) ராஜ்ய சபா உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி இருவரும் இரகசியமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு ஸ்மிருதி இரானி, வெங்கையா நாயுடுவின் பாதங்களைத் தொட்டு வணகினார்.
அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி இருவரும் இந்த மாதா தொடக்கத்தில் குஜராத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரத்தில் ராஜ்யசபா உறுப்பினரின் உதவியாளருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரியான மெஹமூத் அக்தர், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ விவரங்களைத் திரட்டி தகவல் அளித்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.