டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் கூட்டம்!!

காங்கிரஸ் கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று கூடுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 1, 2019, 10:29 AM IST
டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் கூட்டம்!! title=

புது டெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற போதிலிலும் பாஜக 303 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்தது.

அதேவேளையில் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்தை பெறுவதிலும் சிக்கல் கண்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்ட அமோதி தொகுதியில் அவர் பாஜக-வின் ஸ்மிரித்தி இராணியிடன் தோல்வியடைந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் அறிவித்தது, காங்கிரஸ் கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மக்களவை தேர்தலில் சந்தித்த படுதோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் நேற்று எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெற விருந்தது, ஆனால் கடைசி கட்டத்தில் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 52 பேர் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து இவர்களுக்கான முதல் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் உள்ள மைய அறையில் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும், நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கான வியூகங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றகுழு தலைவராக தற்போது சோனியா காந்தி  உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News