புது டெல்லி: 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இன்று மோடி மீண்டும் பிரதமராகபதவியேற்க்க உள்ளார். மத்திய அமைச்சரவையில் யார் ? யாருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அமைச்சரவையில் யாருக்கு எல்லாம் இடம் கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
542 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக. இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தை பொருத்த வரை திமுக அலை தான் வீசியது என்று தான் கூற வேண்டும்.
தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலத்தில் 39 தொகுதிக்கு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் 38 இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது. பாஜக - அதிமுக கூட்டணி வெறும் ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதிலும் பாஜக தான் போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.
தற்போது பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் என்பதால், அவரை எப்படியாவது அமைச்சராக்கி விட வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல முயற்ச்சிகளை எடுத்து வருகிறார். அதற்கான பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் தன் மகனுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என நேரடியாக பாஜக மேலிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரம் கூறியுள்ளது. எப்படியாவது தனது மகனை அமைச்சராக்கி விட வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து ஓபிஎஸ் வேலை செய்து வருகிறார்.
தமிழகத்திலிருந்து ஓ.பி. ரவீந்திரநாத் குமார் அமைச்சராக தேர்ந்தேடுக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்த வந்த நிலையில், பாஜக-வை பொருத்த வரை கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு ஒரு அமைச்சரவை பதவி கொடுக்கலாம் என்ற கோணத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும், ஜெயலலிதாவின் விசுவாசியான வைத்திலிங்கம் பாஜக அமைச்சரவையில் இடம் பெற போவதாக தகவல்கள் வந்துள்ளது. இதை அதிமுகவும் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது வைத்திலிங்கம் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
அதே சமயத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்ப்பட்டு உள்ளது. அதிமுகவில் பல மூத்த தலைவர்கள் இருக்கும் போது புதிதாக வந்த ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், கட்சியில் பல சர்ச்சைகள் ஏற்ப்படும் என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தை பொருத்த வரை அதிமுக - பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் மட்டுமே. அந்த அடிப்படையில் அவருக்கு அமைச்சரவையில் பதவி கிடைக்கலாம் எனத் தெரிகிறது. அதாவது இணை அமைச்சர் பதவியாவது கிடைக்கக் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஓபிஎஸ் தொடர் முயற்ச்சி வீண் போகாது என்றே சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.... பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று!!