தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார். சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கன மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார்.
தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தின் கடலோர இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் 45 கி. மீ. வேகத்தில் காற்றுவீசாவுள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில முறை மழை பெய்ய கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 32 மற்றும் 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று, இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
பெங்களூருவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. பல்வேறு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (02-10-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
கேரளா, கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
இலட்சத்தீவு, கடலோர ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னையை பொருத்த வரை:
மேட்டூர் அணையின் நீர் சம்பா சாகுபடிக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.
தமிழகம், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வறட்சி காரணமாக குறைந்துகொண்டே வந்தநிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிரித்ததால் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.
இந்நிலையில் இன்று பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது!
தமிழாகத்தில் கடந்த பத்து வருடங்களாக பெய்து வரும் மழையின் நிலவரங்களை பற்றி அறிவோம்.
எந்தந்த ஆண்டில் எவ்வளவு மழை பெய்துள்ளன என்பதை தெரிந்து வைத்துக் கொள்வோம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழைப்பொழிவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் தென்மேற்கு பருவமழை பொய்த நிலையில், தமிழகம் முழுவதும் வறட்சி காணப்பட்டது. இந்த வறட்சியின் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் 38% குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு தமிழகமெங்கும் மழை பரவலாக பெய்தது.
தமிழகம், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வறட்சி காரணமாக குறைந்துகொண்டே வந்தநிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிரித்ததால் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (26-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகா, கடலோர ஆந்திரா பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளா, இலட்சத்தீவு, வடக்கு உள் கர்நாடகா, ராயலசீமா. பகுதிகளில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகம், தெலுங்கானா பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னையை பொருத்த வரை:
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (25-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகா பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
வட தமிழகம் மற்றும் இலட்சத்தீவு, வடக்கு உள் கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகம், கேரளா, தெலுங்கானா பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னையை பொருத்த வரை:
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்து வருகிறது. நாள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 மாதங்களுக்குப் 80 அடியை தாண்டியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வறட்சி காரணமாக குறைந்துகொண்டே வந்தநிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிரித்ததால் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து கணிசமாக உயர்த்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டியுள்ளது.
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக அனைத்து அணைகளிலும் நீர்வரத்து சற்று கணிசமாக உயர்ந்து வந்தது. எனினும் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் அணைகளின் நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டியுள்ளது.
இன்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 179 கனஅடி நீர் வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக அனைத்து அணைகளிலும் நீர்வரத்து சற்று கணிசமாக உயர்ந்து வந்தது. எனினும் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் அணைகளின் நீர்வரத்தும் குறைந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று வரை மேட்டூர் அணைக்கு, 22 ஆயிரத்து 77 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில் தற்போது வினாடிக்கு 13 ஆயிரத்து 199 கன அடியாக சரிந்துள்ளது.
சீனாவின் குய்ஹோ மாகாணத்தில் கடுமையான மழை பெய்தததை அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்ளூர் போலீஸ், தீயணைப்பு வீரர்கள், மருத்துவத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் அரசாங்க ஊழியர்கள் உட்பட 2,800 பேருக்கு மேல், 110 அவசர வாகனங்களுடனும், 20 ஆய்வக கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் எட்டு ட்ரோன்கள் ஆகியவற்றுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. நாள் ஒன்றிற்கு சராசரியாக 3.5 அடி உயர்ந்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 மாதங்களுக்குப் 50 அடியை தாண்டியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வறட்சி காரணமாக குறைந்துகொண்டே வந்தநிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிரித்ததால் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் நேற்று 3.6 அடி உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு 10,535 கன அடியிலிருந்து 21,947 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 48.77 அடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட உள்ளது. இன்று முதல் தொடர்ந்து 12 நாட்களுக்கு அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திராவின் வடக்கு பகுதியிலிருந்து கன்னியாகுமரி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ள காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
நேற்று காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:
சின்னக்கல்லாறு 5 செ.மீ., வால்பாறை 4 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், டி.ஜி.பி. அலுவலகம், நடுவட்டம் தலா 3 செ.மீ., ஆலங்காயம், போச்சம்பள்ளி, தளி, வாணியம்பாடி தலா 2 செ.மீ., எண்ணூர், போளூர், உத்தமபாளையம், வானூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.