தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

Last Updated : Oct 29, 2017, 01:02 PM IST
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! title=

தமிழகத்தின் கடலோர இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும்  45 கி. மீ. வேகத்தில் காற்றுவீசாவுள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில முறை மழை பெய்ய கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 32 மற்றும் 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News