தமிழகத்தில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம்

Last Updated : Aug 7, 2017, 09:05 AM IST
தமிழகத்தில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் title=

ஆந்திராவின் வடக்கு பகுதியிலிருந்து கன்னியாகுமரி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ள காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும். 

நேற்று காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:

சின்னக்கல்லாறு 5 செ.மீ., வால்பாறை 4 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், டி.ஜி.பி. அலுவலகம், நடுவட்டம் தலா 3 செ.மீ., ஆலங்காயம், போச்சம்பள்ளி, தளி, வாணியம்பாடி தலா 2 செ.மீ., எண்ணூர், போளூர், உத்தமபாளையம், வானூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.  

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Trending News