ஜப்பானில் அமைத்துள்ள அமெரிக்க 7-ஆவது பிரிவைச் சேர்ந்த போர்க் கப்பல் திங்கள்கிழமை அன்று எண்ணெய் ஏற்றி வந்த சரக்குக் கப்பலுடன் அமெரிக்காவின் அமெரிக்க 7-ஆவது பிரிவைச் சேர்ந்த ஜான் எஸ். மெக்கெய்ன் போர்க் கப்பல் மோதியது. இந்த விபத்தின் போது கப்பலில் இருந்த 10 மாலுமிகள் மயமாகினார்கள். 5-க்கு மேற்ப்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதற்கிடையில் திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் மாயமான சில மாலுமிகளின் உடல்களை தேடல் பணியில் ஈடுபட்ட மலேசிய மீட்புப் பணிக்குழுவினர் கண்டெடுத்தனர். ஆனால் மலேசியக் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட உடற்பாகங்கள் ஜான் எஸ். மெக்கெய்ன் என்ற அமெரிக்கப் போர்க்கப்பலைச் சேர்ந்த மாலுமிகளின் சடலமல்ல என்று அமெரிக்கக் கடற்படை தெரிவித்திருக்கிறது. அதாவது அந்த உடல்களை மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டதாகக் அமெரிக்கக் கடற்படை கூறியுள்ளது.