சமூக வலைதளங்கள் வாயிலாக கெஜ்ரிவால் பிரதமர் மோடி மீது பகிரங்க குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இக்கட்சி சார்பில் தனது ஆதரவாளர்களுக்கு 10 நிமிட வீடியோ பதிவை சமூக வலைதளங்கள் வாயிலாக அனுப்பியுள்ளார் கெஜ்ரிவால் அதில் அவர் பேசியிருப்பதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு டில்லியில் எனது ஆட்சியை சீர்குலைக்க முயற்சிக்கிறது. பிரதமர் மோடி ஆம் ஆத்மி கட்சியை ஒழி்த்துக்கட்ட சதி செய்கிறார். சமீப காலமாக எனது கட்சியை சேர்ந்தவரகள் மீதான கைது நடவடிக்கையின் பின்னணியில் மோடி உள்ளார். என்னை பழிவாங்குவதிலேயே மோடி ஆர்வம் காட்டுகிறது. ஒரு வேளை அவர் என்னை கொன்று விடலாம். கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கை வளரவிடாமல் பா.ஜ.வின் தேசிய தலைவர் அமித்ஷா முயற்சி செய்கிறார். ஆம் ஆத்மி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார் என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரதமர் மோடி மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.