பாகிஸ்தான் அணியுடன் நாங்கள் ஆட ரெடி. ஆனால் பாகிஸ்தானில் சென்று ஆட மாட்டோம் என திட்டவட்டமாக கூறிய 10 இலங்கை வீரர்கள் தொடரிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.
லக்னோவில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உடல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒரு மணி நேரதிற்கு இரண்டு ரூபாய் கட்டணத்தில் வாடகை சைக்கிள் திட்டத்தை துவங்கியுள்ளனர்..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து சேலத்தில் பா.ம.க.வினர் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம், இரயில் மறியலில் போன்றவை நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும், தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் ஒருவரது வீட்டினில் அத்துமீறி நுழைந்த மலைப்பாம்பு ஒன்றினை லாவகமாக பிடிக்கும் அந்த ஆர்வலரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கரம் ரயன் சர்வதேச பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கொலை செய்யப்பட்டான். இந்த கொலை தொடர்பாக பள்ளியில் பணியாற்றிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு பள்ளிகளில் பாதுகாப்பு குறித்து டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டன.
இந்நிலையில் சிபிஎஸ்இ நிர்வாகம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில்,
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 15-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை ரஜினிகாந்த் சென்னையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கு இன்று முதல், 'ஒய்' ('Y') பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 'ஒய்' ('Y') பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி கூடுதல் பாதுகாப்பு கேட்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்றுமுதல் 'ஒய்' ('Y') பாதுக்காப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பினர் குடியரசு தின விழாவின் போது நாசவேலையில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 60,000 மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள முக்கிய மார்க்கெட் பகுதிகளான சரோஜினி நகர், லாஜ்பத் நகர், கமலா மார்க்கெட், நிஜாமுதீன் மற்றும் புது டெல்லி ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
68-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி நாளை பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, தலைநகர் டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 70 ஆயிரம் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தன்று உரையாற்றும் பிரதமர்கள் குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் இருந்தே தங்களின் உரையை நிகழ்த்துவதே மரபாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக திறந்து அரங்கிலேயே தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.