காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து சேலத்தில் பா.ம.க.வினர் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம், இரயில் மறியலில் போன்றவை நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, போராட்டம் நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது.
அதன்படி, சேலம் மாவட்டம், மேட்டூரில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கிராமத்து பகுதிகளில் இயக்கப்படும் அரசு நகர பேருந்துகள் மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டன. முழு அடைப்பு காரணமாக மேட்டூர் பேருந்து நிலையம், சதுரங்காடி, உழவர்சந்தை, உள்பட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
துணை கண்காணிப்பாளர் சௌந்தரராஜன் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தையொட்டி மேட்டூர் பூங்கா அருகே பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி, நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது அரசு பேருந்த்கள் மீது கல்வீசப்பட்டது.
அதன்படி, சேலம் மாவட்டம், எடப்பாடியில் நேற்று அதிகாலை மேட்டூர் சென்ற அரசு பேருந்து, பவானியிலிருந்து எடப்பாடி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, எடப்பாடியிலிருந்து சேலத்திற்கு சென்ற தனியார் பேருந்து ஆகிய மூன்று பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன.
அதேபோன்று, எடப்பாடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு காலையிலேயே அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் காவல் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
இதற்கிடையே பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியது தொடர்பாக பிரகாஷ் (30), தாண்டவன் (40) ஆகிய இருவரை காவலாளர்கள் கைது செய்தனர்.