மஹாராஷ்டிராவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மஹாராஷ்டிராவில் முழு அடைப்பு தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.   

Last Updated : Jan 3, 2018, 12:56 PM IST
மஹாராஷ்டிராவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு title=

புனே கலவரத்தை கண்டித்து இன்று  மகாராஷ்டிராவில் முழு கடையடைப்பு நடக்கிறது. இந்நிலையில்  வன்முறையைக் கண்டித்து, மஹாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பாரிபா பகுஜன் மகா சங்கத் தலைவரும், சட்டமேதை அம்பேத்கரின் பேரனுமான, பிரகாஷ் அம்பேத்கர் கூறியதாவது:  இந்த வன்முறை சம்பவங்கள், தலித் மக்களுக்கும், மராத்தா மக்களுக்கும் இடையேயான மோதல் இல்லை. வன்முறை ஏற்படாமல் தடுக்க, மாநில அரசு தவறிவிட்டது. 

இந்த வன்முறையைக் கண்டித்து, இன்று மஹாராஷ்டிரா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை ஏற்க முடியாது.உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதித்துள்ளனர். இதை தொடர்ந்து ஐம்பது மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 

இந்த முழு அடைப்பை தொடர்ந்து, பணிக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

 

 

 

 

 

Trending News