Whatsapp-ல் ரகசிய வீடியோவா - கவலை வேண்டாம், ஈசியா மறைக்கலாம்!

கேலரியில் இருந்து WhatsApp புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மறைப்பது எப்படி!

Last Updated : Dec 24, 2017, 02:43 PM IST
Whatsapp-ல் ரகசிய வீடியோவா - கவலை வேண்டாம், ஈசியா மறைக்கலாம்! title=

உங்களை மொபைலில் இருக்கும் WhatsApp படங்களையும், வீடியோக்களையும் மற்றவர்களிடம் இருந்து மறைக்க முடியுமா? சாத்தயம்தானா? என்றால் அந்த கேள்விக்கு பதில் ஆமாம் எனம் விடை தான்....

ஆமாம். இது சற்று வியப்பாக தான் இருக்கிறது. தற்காலகட்டத்தில் WhatsApp என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இருந்து தொலைவில் இருக்கும் நினைவுகளை இழக்க வைக்க உதவுகிறது.

நீங்கள் உற்றுநோக்கினால் தெரியும், உங்கள் கைப்பேசியின் சேமிப்பகத்தினை Whatsapp படங்கள் மற்றும் வீடியோக்கள் எவ்வளவு வீனாக்குகிறது என்ற. இவற்றில் பெரும்பாலும் இடம் பெருபவை "காலை வணக்கம்", "மாலை வணக்கம்" எனும் சாதாரண செய்திகள். சரி போகட்டும் இதை விடவும் முக்கியமான விசயங்களும் Whatsapp-ல் பகிரப்படுவதுண்டு. இவற்றையெல்லாம் எப்படி மற்றவர் கண்களில் படாமல் பாதுகாப்பாக மறைப்பது?

கேலரியில் இருந்து WhatsApp புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மறைப்பது எப்படி!

  • Google Play Store-க்கு சென்று உங்கள் Android ஸ்மார்ட்போனில் ’ES File Explorer’-ஐ பதிவிறக்கம் செய்யவும். (உங்கள் கைப்பேசியில் முன்னதாக இருக்கும் பட்சத்தில் இச்செயல்பாடு அவசியமில்லை)
  • கேலரியை திறந்து அதில் "WhatsApp" folder-னை தேர்வு செய்யவும்
  • பின்னர் அதனுள் இருக்கம் WhatsApp Images போல்டரின் பெயரினை .WhatsApp Images என மாற்றவும். இந்த செயல்பாடானது அந்த போல்டரில் உள்ள தகவல்களை மற்றவர் கண்களில் இருந்து மறைத்து வைக்கும்.

இதேப்போல் வீடியோ, ஆடியோ போன்ற அணைத்து போல்டர்களுக்கும் பெயர் மாற்றம் செய்து அணைத்து தகவல்களையும் மறைத்து வைக்கலாம்!

Trending News