தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு ஆணை 70-ல் படி, 2019 ஆசிரியர் தகுதிகாண் தேர்வில் தமிழ்ப் பண்டிதர்கள் தேர்வு எழுதுவதற்கான தகுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை. இது பெரும் கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் மாநில பணி நியமன குழுவான, உத்தரப்பிரதேச மாநில பொது பணி துறை ஆனது சுமார் 10768 உதவி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கேரள மாநில SSLC தேர்விற்கான் கால அட்டவணையினை அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு அட்டவணையினை அரசின் அதிகாரபூர்வ இணையதளமான keralapareekshabhavan.in -ல் பதிவேற்றியுள்ளது.
'நீட்' தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE அறிவுறுத்தியுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தில் பயின்று, நடப்பாண்டில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களது தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மற்றும் குறுந்தகவல் மூலமாக வெளியிடப்பட்டது!
குரூப்-4 தேர்விற்கு விண்ணபித்த விண்ணப்பதாரர்கள் “APPLICATION STATUS” என்ற இணையத்தில் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் 2018-2019 ஆம் ஆண்டு தேர்விலிருந்து 9 மற்றும் 10-ம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35-ல் இருந்து 33 ஆக மாற்றம். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40-ல் இருந்து 35 ஆக மாற்றம் என அறிவிப்பு.
CRP RRB VI-க்கான ஆரம்ப ஆன்லைன் தேர்வுகளின் முடிவுகளை "வங்கியின் பணியாளர் தேர்வின் நிறுவனம் (IBPS)" அறிவித்துள்ளது.
தேர்வாளர்கள் தங்களது தேர்வின் முடிவுகளை www.ibps.in என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்
IBPS RRB அதிகாரி ஸ்கேல்-I 2017-ன் முதல்நிலை தேர்வு முடிவுகளைப் பார்பதற்கு:-
- www.ibps.in என்ற இணையத்தளத்தை திறக்கவும்
தமிழக அரசு துறையில் பணிபுரிவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைவது அவசியம் ஆகும். அதன்படி குரூப் 2ஏ தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 2,536 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 1,953 காலி பணியிடங்களுக்கு 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்கின்றனர்.
முன்னதாக கடந்த 5-ம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட போவதில்லை என்று பேரணி நடத்தினர். எனினும், தற்போது குரூப் 2ஏ தேர்வுகள் சச்சரவின்றி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்வி ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 91.1 % பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல் பெண்களே இந்த தேர்விலும் அதிகமாக தேர்ச்சி பெற்றனர். தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுதேர்வு ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்விற்கான முடிவுகள் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2017–2018–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் சி.பி.எஸ்.இ. நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது.
இதனால், தமிழக மாணவர்களுக்கு ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற தமிழக அரசு பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.