அண்ணா பல்கலை., பொறுப்பு முதல்வர் விஜயகுமார் நீக்கம்

திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் நீக்கம்! 

Last Updated : Aug 3, 2018, 01:42 PM IST
அண்ணா பல்கலை., பொறுப்பு முதல்வர் விஜயகுமார் நீக்கம்  title=

திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் நீக்கம்! 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்குவதற்காக, அவர்களிடமிருந்து பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதையடுத்து, முன்னாள் தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி உமா உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.400 கோடி ஊழல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட உமா இம்முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.அன்பழகன் தெரிவித்ததையடுத்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

இதையடுத்து, தேர்வு கட்டுப்பாட்டு அலுவர் உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் நீக்கம் செய்துள்ளனர். 

 

Trending News