“பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்” இந்தியாவுக்கே சொந்தம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜித் பல்திஸ்தான் பகுதியை 1947-ம் ஆண்டு சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின் போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான கேள்விக்கு சுஷ்மா பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீரின் குல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து இன்று அதிகாலை முதல் வீடு வீடாக சோதனை நடத்தி வந்தனர்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் பிரிவினைக்கு ஆதரவாக 'காஷ்மீர் விடுதலை' என ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், சமூக அறிவியல் பிரிவு கட்டடத்தில் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும். மக்களுக்கு சுய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை பார்த்த மாணவர்கள் சிலர் அளித்த தகவலின் பேரில், பல்கலை நிர்வாகம் போஸ்டரை அகற்றியது. இந்த போஸ்டரில், உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா ஆகியோர் இடம்பெற்றிருந்த ஜனநாயக மாணவர்கள் சங்கத்தின் பெயர் இடம் பெற்றிருந்தது.
தீவிரவாதிகள் ஊடுருவலை முறியடித்த எல்லைப் பாதுகாப்பு படையினர்.
காஷ்மீரில் இந்திய எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபடுவதை எல்லைப் பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் பண்டிப்புரா மாவட்டத்தில் ஊடுருவலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 5 பேர் காயம் அடைந்தனர். ஒரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் மாநிலம் குரேஷ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் குரேஷ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, ராணுவ வீரர்கள் பலர் புதையுண்டனர். இதில், 21 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மற்றும் மதுரையை சேர்ந்த்த இளவரசன் மற்றும் சுந்தர் பாண்டியன் ஆகிய இரு வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவுகளில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்
காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் நேற்று மாலை அடுத்தடுத்து இரண்டு பனிச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலரது நிலை என்னவானது என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதி பகதூர் அலிக்கு எதிராக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிராக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அவர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்ததாக அதில் கூறப்பட்டு உள்ளது.
ராணுவ கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 3 வீரர்கள் பலியானார்கள்.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாம்போர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த ராணுவ கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள். ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்பதாக வாழும் கலை (தி ஆர்ட் அப் லிவிங்) அமைப்பின் நிறுவனம் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள இந்த நடவடிக்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர் கூறினார்.
தற்போது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பினும், இது விரைவில் தீரும் என நம்பிக்கைத் தெரிவித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இவ்விஷயத்தில் பொறுமை காக்க மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மோதலில் போலீஸார் இருவர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:- தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதியில் தீவிரவாதி ஒருவர் பதுங்கியிருப்பதாக உளவுப் பிரிவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனே அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர். அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த சண்டையில் சத்ரிபோரா சோபியான் பகுதியைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சதாம் ஹுசைன் கொல்லப்பட்டார்.
இந்தியாவிற்கு எதிராக முஜாகிதீனுக்கு வழியை திறக்கவேண்டும் என்று பாகிஸ்தான் அரசை பயங்கரவாதி மசூத் அசார் வலியுறுத்தி உள்ளான்.
இந்நிலையில் பதன்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாம் மீதான பயங்கரவாத தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசார், இந்தியா விற்கு எதிராக முஜாகிதீனுக்கு வழியை திறங்கள் என்று பாகிஸ்தானை வலியுறுத்தி உள்ளான், காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளான்.
இந்தியாவின் ஒரு பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டங்கள் தீட்டி வருகின்றனர்.
உரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 28-ம் தேதி நள்ளிரவு ஊடுருவி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 40-க்கு அதிகமான பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாக ராணுவம் அறிவித்தது.
இதற்கு சர்ஜிகல் தாக்குதல் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இப்படியொரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வருகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் இது தொடர்பான ஆதாரங்களை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.
எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹண்ட்வாராவில் அமைத்துள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதாவது லாங்கேட் பகுதியில் உள்ள ஹண்ட்வாரா ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சர்வதேச எல்லைப்பகுதியில் 3 இடங்களில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியையும் ராணுவத்தினர் முறியடித்துள்ளனர்.
பாகிஸ்தானின் கனவு பலிக்காது என ஐ.நா., பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
ஐ.நா., சபையில் பேசியதாவது:- உலகளவில் வறுமையும் சுகாதார பிரச்னைகளும் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இந்தியாவில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தில் 2 லட்சம் பள்ளிகளில் 4 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.