டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் பிரிவினைக்கு ஆதரவாக 'காஷ்மீர் விடுதலை' என ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், சமூக அறிவியல் பிரிவு கட்டடத்தில் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும். மக்களுக்கு சுய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை பார்த்த மாணவர்கள் சிலர் அளித்த தகவலின் பேரில், பல்கலை நிர்வாகம் போஸ்டரை அகற்றியது. இந்த போஸ்டரில், உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா ஆகியோர் இடம்பெற்றிருந்த ஜனநாயக மாணவர்கள் சங்கத்தின் பெயர் இடம் பெற்றிருந்தது.
இது தொடர்பாக மாணவர் ஒருவர் கூறுகையில், இந்த போஸ்டர் கடந்த 3 நாட்களுக்கு மேலாக ஒட்டப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபோது வன்முறை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.