ஆஷிஷ் நெஹ்ரா 1979-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி டெல்லியில் பிறந்தார். இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
அவரை பற்றி சில குறிப்பு:-
38 வயதான ஆஷிஷ் நெஹ்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர்.
1999-ம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக 17 டெஸ்ட் விளையாடி 44 விக்கெட் எடுத்துள்ளார்.
120 ஒருநாள் போட்டியில் விளையாடி 157 விக்கெட் எடுத்துள்ளார்.
26 டி20 போட்டியில் விளையாடி 34 விக்கெட் எடுத்துள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் டி-20 போட்டி டெல்லி புரோஜ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ், இன்று பணி ஓய்வு பெறுகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி ராமமோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் அவருடைய நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம், பல கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அவர்களின் பதவிக்காலம் நாளை(ஆகஸ்ட் 27) முடிவடைகிறது.
இவருக்கு பதிலாக தீபக் மிஸ்ரா நியமனம் அவார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 2018-ம் ஆண்டு அக்டோபர் 2 வரை பதவிவகிப்பார் என தெரிகிறது.
ஜே.எஸ்.கெஹர் உச்ச நீதிமன்ற 44-வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த ஜே.எஸ்.கெஹர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 1977-ஆம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற முதல் சீக்கியர் என்னும் பெருமையை பெற்றவர்.
15 ஆண்டுகளாக உலகின் தலை சிறந்த கிரிக்கட் வீரராக விளங்கிய இலங்கை அணியின் குமார் சங்ககாரா சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
134 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சங்ககாரா, 12400 ரன்களை எடுத்துள்ளார்.
சங்ககாரா தலைமையிலான ஒரு நாள் போட்டிக்கான இலங்கை அணி 2007, 2011-ம் ஆண்டுகளில் இறுதி போட்டி வரை சென்றது. ஓய்வை அடுத்து சங்ககாரா உள்ளூர் முதல்தர போட்டிகளில் விளையாடி வந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள தொடர் உடன் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சங்ககாரா அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.