இன்று இரவு 8 மணிக்கு கான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
நேற்று இரவு 8 மணிக்கு கான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
குஜராத் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பிளே-ஆஃப் சுற்றில் ஆடும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது.
நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்தது.
இன்று இரவு 8 மணிக்கு கான்பூரில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
குஜராத் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பிளே-ஆஃப் சுற்றில் ஆடும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது.
இம்முறை இளம் இந்திய வீரர்களை கொண்டுள்ளதாக டெல்லி அணி இருக்கிறது டெல்லி அணியின் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு சிறப்பான எதிர்காலத்தை இந்த தொடர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இப்போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெற்றது.
நேற்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 14 ரன்கள்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெறும்.
கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி 12 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்து நெருக்கடிக்கு உள்ளான கொல்கத்தா அணி தனது கடைசி ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி இழந்த பார்மை மீட்டுள்ளது.
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ஐதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகளை பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடியது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகளை பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும்.
எனவே ஐதராபாத் அணிக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோல்வியை (டெல்லி, புனேக்கு எதிராக) தழுவியுள்ள ஐதராபாத் அணி சொந்த ஊரில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
கப்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மார்ஷ் 43 பந்தில் 58 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அம்லா 104 ரன்கள் (60 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்ஸ்) குவித்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.
இன்று மாலை 4 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
11 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகள் பெற்றுள்ள ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட முடியும்.
இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் எழுச்சி கண்டிருக்கும் டெல்லி அணி தனது கடைசி இரு ஆட்டங்களில் ஐதராபாத் எதிராக 186 ரன்கள் மற்றும் குஜராத்துக்கு எதிராக 209 ரன்கள் இலக்கை சேசிங் செய்து வெற்றி பெற்றது. குறிப்பாக இளம் வீரர்கள்(ரிஷப் பந்த், சாஞ்சு சாம்சன்) பேட்டிங்கில் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.
நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது.
இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு அணி 11 ஆட்டத்தில், 8 தோல்வி, 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டதால் எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஆறுதல் வெற்றிகளை பெற பெங்களூரு அணி முயற்சிக்கும்.
ஐபிஎல் போட்டி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வி கண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்தை வென்றதன் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளது. அதாவது எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அது முடியும். ஒன்றில் தோற்றாலும் நடையை கட்ட வேண்டியது தான்.
எனவே இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராகுல் திரிபாதி(93 ரன்கள்) அதிரடியால் புனே அணி ஏழாவது வெற்றியை பெற்றுள்ளது.
கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.
கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி இந்த சீசனில் 10 ஆட்டத்தில், 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
புனே அணி 10 ஆட்டத்தில், 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடைசி இரு ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணி சரியான கட்டத்தில் பார்முக்கு திரும்பி உள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர்டேவில்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. யுவராஜ் சிங் 41 பந்துகளில், 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் முகமது சமி 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.