கிங்ஸ் லெவன் பஞ்சாப் - குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
கப்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மார்ஷ் 43 பந்தில் 58 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அம்லா 104 ரன்கள் (60 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்ஸ்) குவித்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.
இந்த தொடரில் அம்லாவின் 2-வது சதம் இதுவாகும். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 20 ரன்கள் குவிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்தது. டி.ஆர். ஸ்மித் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கிஷான் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். டி.ஆர். ஸ்மித் 39 பந்துகளில் 74 ரன்களை குவித்து மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்திக் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. குஜராத் அணி 2 பந்துகள் எஞ்சிய நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.