ஐபிஎல் 2017, போட்டி 50: டெல்லி மற்றும் குஜராத் பலப்பரீட்சை

Last Updated : May 10, 2017, 02:46 PM IST
ஐபிஎல் 2017, போட்டி 50: டெல்லி மற்றும் குஜராத் பலப்பரீட்சை title=

இன்று இரவு 8 மணிக்கு கான்பூரில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. 

குஜராத் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பிளே-ஆஃப் சுற்றில் ஆடும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது.

இம்முறை இளம் இந்திய வீரர்களை கொண்டுள்ளதாக டெல்லி அணி இருக்கிறது டெல்லி அணியின் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு சிறப்பான எதிர்காலத்தை இந்த தொடர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

குஜராத் அணியைப் பொறுத்தவரை சுரேஷ் ரெய்னா, டுவைன் ஸ்மித், பின்ச், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், ஜடேஜா என்று மிகப்பெரிய பேட்டிங் வரிசை இருக்கிறது. ஆனால் பந்துவீச்சில் அந்த அணி சுமாராகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக காயம் காரணமாக ஆன்ட்ரூ டை ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய பிறகு அதன் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. 

இன்று மாலை 8 மணிக்கு நடைபெறும் போட்டி சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

 

குஜராத் லயன்ஸ்: 

சுரேஷ் ரெய்னா (கேப்டன்), பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், பாசில் தம்பி, டுவைன் பிராவோ, சிராக் சூரி, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பின்ச், மன்பிரித் கோனி, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷதாப் ஜகதி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி, பிரவீன் குமார், முனாப் படேல், பிரதாம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, ஷேல்லே சவுர்யா, நது சிங், தேஜாஸ் பரோகா, ஆன்ட்ரூ டை.

டெல்லி டேர்டேவில்ஸ்: 

ஜாகீர் கான் (கேப்டன்), முகமது ஷமி, சபாஷ் நதீம், ஸ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, கார்லோஸ் பிராத் வெயிட், ஷமா மிலிந்த், கிறிஸ் மோரிஸ், கருண் நாயர், பிரதியுஷ் சிங், ரிஷப் பந்த், சாம் பில்லிங்ஸ், சஞ்சு சாம்சன், ஆதித்யா தாரே, சயத் ஹலீத் அகமது, கோரே ஆண்டர்சன், மேத்யூஸ், ரபாடா, முருகன் அஸ்வின், பாட் கம்மின்ஸ், நவ்தீப் ஷைனி, அங்கீத் பாவ்னே, ஷசாங்க் சிங்.

Trending News