ஐபிஎல் 2017: மும்பை - பஞ்சாப் இன்று மோதல்

Last Updated : May 11, 2017, 03:16 PM IST
ஐபிஎல் 2017: மும்பை - பஞ்சாப் இன்று மோதல் title=

இன்று இரவு 8 மணிக்கு கான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றனர். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

இந்த ஆட்டம் பஞ்சாப் அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாகும். இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 5-ஆவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, இந்த ஆட்டத்தில் வென்றாலொழிய அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைக்க முடியாது. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு அந்த அணி கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

மும்பையும், பஞ்சாபும் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை 10 வெற்றிகளையும், பஞ்சாப் 9 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

Trending News