ஐபிஎல் 2017: குஜராத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

Last Updated : May 11, 2017, 08:47 AM IST
ஐபிஎல் 2017: குஜராத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி title=

நேற்று இரவு 8 மணிக்கு கான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. 

குஜராத் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பிளே-ஆஃப் சுற்றில் ஆடும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது.

நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

டெல்லி அணியின் ஷிரியாஸ் ஐயர் 57 பந்துகளில் 96 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் களமிறங்கிய அமித் மிஸ்ரா 2 பந்துகளில் இரண்டு 8 ரன்களை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Trending News