ஐபிஎல் 2017: கொல்கத்தாவை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தியது பஞ்சாப்

Last Updated : May 10, 2017, 08:49 AM IST
ஐபிஎல் 2017: கொல்கத்தாவை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தியது பஞ்சாப் title=

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இப்போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெற்றது.

நேற்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 14 ரன்கள்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. 

பின்னா் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்து பஞ்சாப் அணியிடம் தோற்றது. 

Trending News