டாக்டர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது சாதாரண விசியம் இல்லை. இதுக்குறித்து அவரிடம் கேட்ட வேண்டும் என முன்னால் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
இன்று மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரெப்போ விகிதம் உயர்த்தப்படும் என முடிவு செயப்பட்டு உள்ளது.
வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமே என ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை.
இந்நிலையில், பணப்பறிமாற்றத்தை தடுக்கும் விதமாக திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமே என ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை வங்கிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் 50 மற்றும் ரூபாய் 200 நோட்டுகளை வெளியிட்டது.
தில்லி ரிசர்வ் வங்கியிலிருந்து ரூபாய் 50 மற்றும் ரூபாய் ரூபாய் நோட்டுகளில் புதிய குறிப்புகளைத் திரும்பப் பெற மக்கள் வரிசையில் வரிசையாக நிற்கிறார்கள்.
மத்திய அரசு ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பல நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி தற்கலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது. ரூ.2000 நோட்டுக்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.500 நோட்டுக்கள் அதிகம் அச்சிடப்பட்டு வருகின்றன.
கடந்த நவம்பர் 8 ம்தேதி மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஏடிஎம் மெஷின்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே செயல்பட்டதால் பொதுமக்கள் பணம் எடுக்க மிகவும் சிரமப்பட்டனர்.
செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளை அதிகபட்சமாக ரூ5,000 வரை மட்டுமே வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும் என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல காலதாமதம் ஏற்படுவதை தடுக்க ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 21 நாட்களில் வர வேண்டிய பணம் 6 நாட்களில் கிடைத்துவிடும்.
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள், வங்கிகளில் முடங்கி கிடக்கிறார்கள்.
சமூகவலைதளங்களில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவதாக கூறி ரூ.2,000 நோட்டுகளின் படங்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் ஆர்பிஐ வங்கி ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ரூ.2,000 நோட்டுகள் கர்நாடகாவில் உள்ள மைசூரு ஆர்பி.ஐ அச்சகத்தில் அச்சிட்டுவிட்டதாகவும், விரைவில் மக்களின் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இங்கு காட்டப்பட்டுள்ள கரன்சியில் காந்தியின் படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த ஆர்பிஐ இன்னும் எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.