புதுடெல்லி: வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல காலதாமதம் ஏற்படுவதை தடுக்க ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 21 நாட்களில் வர வேண்டிய பணம் 6 நாட்களில் கிடைத்துவிடும்.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற அறிவுறுத்தப்பட்டது. இதனால் மக்கள் வங்கிகளில் அலை மோதினர். நீண்ட வரிசையில் நின்று தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்கின்றனர்.
புதிய ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டுவரப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து வங்கிகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புதிய ரூபாய் நோட்டுக்களை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும் ஜனவரி 15-ம் தேதிக்குள் நாடுமுழுவதும் இயல்பான பொருளாதார நிலை ஏற்பட்டுவிடும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது