ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தம்?

Last Updated : Jul 26, 2017, 11:18 AM IST
ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தம்? title=

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி தற்கலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது. ரூ.2000 நோட்டுக்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.500 நோட்டுக்கள் அதிகம் அச்சிடப்பட்டு வருகின்றன. 

கடந்த 40 நாட்களாக ரூ.500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அதிகம் புழக்கத்தில் விட்டு வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

 

Trending News