மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து வந்த உர்ஜித் படேல் தனது பதிவியை நேற்று ராஜினாமா செய்தார். இதுக்குறித்து அவர் கூறுகையில், ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை. என் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் வலுத்து வந்ததாகவும், அதனால் தான் உர்ஜித் படேல் தனது பதிவியை ராஜினாமா செய்தார் எனவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒருவர் தனது பதவி காலத்தில் ராஜினமா செய்தது, இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உர்ஜித் படேலின் ராஜினாமாவை அடுத்து, மத்திய அரசு தன்னாச்சி அமைப்பான ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் தலையிடுகிறதா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இதுக்குறித்து கருத்து தெரிவித்த முன்னால் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன், டாக்டர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது சாதாரண விசியம் கிடையாது. அவர் ராஜினாமா செய்ய என்னக்காரணம் என்பதை குறித்து உர்ஜித் படேலிடம் கேட்கவேண்டும். உர்ஜித் படேலின் ராஜினாமா மிகவும் கவலை அளிக்கிறது. அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டிய விசியம் இது. இவர் ராஜினாமா செய்தது, உண்மையில் அவருக்கு எதிர்ப்பு இருந்தது என்பதின் அறிகுறியாக தெரிகிறது எனக் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.