இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றனவா?

Last Updated : Nov 8, 2016, 04:44 PM IST
இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றனவா? title=

சமூகவலைதளங்களில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவதாக கூறி ரூ.2,000 நோட்டுகளின் படங்கள் பரவி வருகின்றன. 

இந்நிலையில் ஆர்பிஐ வங்கி ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ரூ.2,000 நோட்டுகள் கர்நாடகாவில் உள்ள மைசூரு ஆர்பி.ஐ அச்சகத்தில் அச்சிட்டுவிட்டதாகவும், விரைவில் மக்களின் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இங்கு காட்டப்பட்டுள்ள கரன்சியில் காந்தியின் படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த ஆர்பிஐ இன்னும் எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

Trending News