விஜய், முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு, சென்னை விக்டோரியா ஹாலில் தடையை மீறி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெர்சல்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் 62-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.
மூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது விஜய்-ன் 62_வது படம்.
கடந்த சனவரி 19-ம் தேதி பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது. விஜய் அவர்கள் கிளப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து, ஸ்டிரைக் அறிவித்துள்ளது. இதனால் பல படங்களின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிற்கிறது, இதனால் கடந்த மார்ச் 1-ம் தேதி புதுப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனவே, மார்ச் 16 முதல் சென்னையில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அஜித்தின் விசுவாசம் படத்திற்காக செட் போட்டப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. வருகிற 23-ம் தேதி முதல் வெளியூர்களில் நடக்கும் படப்பிடிப்பும் நிறுத்தப்பட இருக்கிறது
இதை தொடர்ந்து, விஜய், முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு, சென்னை விக்டோரியா ஹாலில் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரான ஜே.கே. சதீஷ் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:- விஜய் படப்பிடிப்பு இன்றும் நடந்து வருகிறது, ஒற்றுமை எங்கே இருக்கிறது. அவருக்கு மட்டும் எப்படி சிறப்பு அனுமதி கிடைத்தது, இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
Actor #Vijay ‘s shooting is happening now at Victoria Hall. Where is our unity? How can our council give spl permission? I strongly oppose this decision. Don’t split up.
— J Satish Kumar (@JSKfilmcorp) March 20, 2018