ஒடிசாவில் பிடிக்கப்பட்ட "அரிய வகை" பறக்கும் பாம்பு! எப்படி இருக்கு தெரியுமா?

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் அரியவகை பறக்கும் பாம்பு ஒன்று கண்டுபிடிப்பட்டுள்ளது.

Last Updated : Mar 18, 2018, 09:59 AM IST
ஒடிசாவில் பிடிக்கப்பட்ட "அரிய வகை" பறக்கும் பாம்பு! எப்படி இருக்கு தெரியுமா? title=

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் அரியவகை பறக்கும் பாம்பு ஒன்று நேற்று கண்டுபிடிப்பட்டுள்ளது. இந்த பாம்பு பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரிந்ததால் போது மக்கள் அனைவரும் பார்த்து வியப்படைந்துள்ளனர். 

பின்பு,  இது தொடர்பாக விலங்குகள் மீட்பு குழுவினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு,  இரண்டு மணி நேரம் போரட்டத்திற்கு பிறகு அந்த அரியவகை பறக்கும் பாம்பை பிடித்துள்ளனர். 

இந்த சிவப்பு நிற பாம்பின் உடலில் உள்ள இடைவெளிகளில் கறுப்பு குறுக்குவெட்டுகள் கவர்ச்சிகரமான தோற்றத்தை அளித்ததால் பார்வையாளர்கள் வெகு நேரம் பார்வைக்காக வைக்கப்பட்டது.

பின்னர், இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், ஆரனேட் ஃப்ளையிங் ஸ்நேக் எனப்படும் அரிதான பாம்பு இனங்கள் இந்தியாவில் அதிகம் காணப்படுவதில்லை. இந்த பாம்பு இனங்கள் இந்தியாவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. இந்த இனங்கள் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.

இங்கு முதன்முறையாக இப்போது தான் இங்கு பார்க்கிறோம் எனத் தெரிவித்தனர்.விஷத்தன்மை கொண்ட இந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Trending News