தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலின் விசாரணை ஒத்திவைப்பு!

முறைகேடு நடைபெற்றதால் தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Last Updated : Apr 11, 2018, 07:23 AM IST
தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலின் விசாரணை ஒத்திவைப்பு! title=

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், கடந்த 2013ல் நடந்தது. அப்போது தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இம்மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிதாக உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்களுக்கான உத்தரவை தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சங்கங்களுக்கு மார்ச் 26 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 -ஆம் தேதி வரை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. 

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த மனு தொடர்பாக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தேர்தல் நடைமுறைகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (ஏப்.16) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Trending News