ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தததை அடுத்து, பலர் பிஎஸ்என்எல் பக்கம் சாயத் தொடங்கி விட்டனர். அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீதான மக்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசும் பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கு ஊக்க அளிக்கும் வகையில், பட்ஜெட்டில் ரூ.82,916 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிக அளவில் கட்டணம் வசூலித்தாலும் அவர்களுக்கு பரவலாக நெட்வொர்க் வசதி உள்ளது என்பதை மறுக்க இயலாது. ஆனால் பொது துறை நிறுவனமான BSNL மற்றும் MTNL நிறுவனத்திற்கு, தனியார் நிறுவனங்கள் அளவிற்கு நெட்வொர்க் இல்லை. மத்திய அரசும் இதனை கருத்தில் கொண்டே, BSNL மற்றும் MTNL நிறுவனத்தின் 4ஜி, 5ஜி உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், பட்ஜெட்டில் (Budget 2024) அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், உங்கள் மொபைல் எண்ணை BSNL எண்ணுக்கு போர்ட் செய்ய விரும்பினால் அல்லது புதிய BSNL சிம் வாங்க விரும்பினால், முதலில் உங்கள் பகுதியில் BSNL நெட்வொர்க் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது பலனளிக்கும். ஏனென்றால் மலிவான திட்டத்தை தேர்வு செய்யும் ஆர்வத்தில், தவறு செய்து விட்டு பின் மனம் வருந்தக் கூடாது. எனவே, உங்கள் பகுதியில் உள்ள BSNL நெட்வொர்க்கை நிலையை சரிபார்ப்பது அவசியம்
உங்கள் நகரம் அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள BSNL நெட்வொர்க் தொடர்பான தகவல்களை நிமிடத்தில் பெற நீங்கள் செய்ய வேண்டியவை
My BSNL செயலி மூலம் நெட்வொர்க்கைச் சரிபார்க்கும் முறை
1. முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் My BSNL செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
2. இப்போது செயலியில் "Network Coverage" ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. நீங்கள் வசிக்கும் நகரத்தின் அல்லது பகுதியின் பின்கோட் எண்ணை உள்ளிட்டு, "Check Coverage" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இதன் மூலம் உங்கள் நகரம் மற்றும் உங்கள் பகுதியின் BSNL நெட்வொர்க் விபரத்தை அறிந்து கொள்ளலாம்.
BSNL சுய சேவை போர்ட்டல் உதவியுடன் நெட்வொர்க் நிலையை அறியும் முறை
1. BSNL நிறுவனத்தின் சுய சேவை போர்ட்டலான https://selfcare.bsnl.co.in/. என்ற இணைய தளத்திற்கு சென்று Network Coverage என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
2. அதில் உங்கள் நகரத்தின் பின்கோட் எண்ணை உள்ளிட்ட பின்னர் BSNL நெட்வொர்க் கவரேஜ் நிலையை டிஸ்ப்ளேயில் காணலாம்.
BSNL வாடிக்கையாளர் சேவை மூலம் நெட்வொர்க் நிலையை அறிதல்
BSNL மொபைல் அல்லது லேண்ட்லைனில் இருந்து 1800-180-1500 என்ற எண்ணில் BSNL வாடிக்கையாளர் சேவையை டயல் செய்யலாம். நீங்கள் பிஎஸ்என்எல் அல்லாத மொபைல் அல்லது லேண்ட்லைனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், 1800-345-1500 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும். வாடிக்கையான சேவையில் இருப்பவர் உங்கள் பகுதியில் உள்ள நெட்வொர்க் நிலை பற்றிய முழுமையான தகவலை வழங்குவார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ