Flipkart Big Diwali sale: ஐபோன்களின் நம்ப முடியாத தள்ளுபடிகள், முந்துங்கள் மக்களே

Flipkart Big Diwali sale: ஐபோன் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. பிளிப்கார்டில் அசத்தலான தள்ளுபடிகளுடன் விற்பனை தொடங்கியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 12, 2022, 12:24 PM IST
  • பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் விற்பனை தொடங்கிவிட்டது.
  • இந்த விற்பனை அக்டோபர் 16 ஆம் தேதி வரை நடக்கிறது.
  • இதில் பல வித சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
Flipkart Big Diwali sale: ஐபோன்களின் நம்ப முடியாத தள்ளுபடிகள், முந்துங்கள் மக்களே title=

Flipkart Big Diwali sale iPhone 13: ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய ஆவலோடு உள்ளவர்களுக்கு நல்ல செய்தி!! பிளிப்கார்டில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனை தொடங்கிவிட்டது. பிளஸ் உறுப்பினர்களுக்கான பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale) நேற்று லைவ் அனது. அனைத்து பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கான ஆறு நாள் விற்பனை நேற்று நள்ளிரவு தொடங்கியது. அக்டோபர் 16 ஆம் தேதி இந்த விற்பனை முடிவடையும். இந்த விற்பனையில் மின்னணு கேஜெட்டுகள் மற்றும் ஆப்பிள் ஐபோன் உட்பட பல வித பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் கூறுகிறது.

பிளிக்பார்டின் இணையதளத்தின்படி, ஆப்பிள் ஐபோன்13 128ஜிபி (Apple iPhone13 128GB) ஸ்டோரேஜ் வகை தற்போது ரூ.58,990க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கிச் சலுகைகள் மற்றும் பிற தள்ளுபடிகளுடன் விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.2000க்கு மேல் தள்ளுபடியில் இந்த போனை வாங்கலாம். iPhone13 ஸ்மார்ட்போன் Apple A15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதை நிறுவனம் iPhone 14 உடன் வழங்குகிறது. iPhone 13-ல் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது 1200 nits உச்ச பிரகாசத்தை (பீக் ப்ரைட்னஸ்) வழங்குகிறது.

மேலும் படிக்க | iPhone 5G: ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஆப்பிள் ஐபோன் 12 மினியை பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ரூ.33,740 முதல் வாங்கலாம். இது 5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உடன் கூடிய சிறிய திரையை கொண்டுள்ளது. இது ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 

அதேபோல், இணையதளத்தில் ரூ.35,990க்கு பட்டியலிடப்பட்டுள்ள ஆப்பிள் ஐபோன் 11ஐ பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.33,740க்கு வாங்கலாம். எஸ்பிஐ மற்றும் கோடக் வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையின் போது, பிளிப்கார்ட் நிறுவனம் ஸ்மார்ட்போன்களில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும், அதாவது பரிமாற்ற சலுகைகளையும் வழங்குகிறது. பரிமாற்றம் செய்யக்கூடிய ஸ்மார்ட்போன்கள் இந்த பிளாட்பார்மில் பட்டியலிடப்பட்டுள்ளன. உதாரணமாக, Oppo Reno 8 5G ஐ 16,900 ரூபாய் வரையிலும், Realme 9 Pro+ 5G ஐ 18,900 ரூபாய் வரையிலும் மாற்றிக் கொள்ளலாம்.

பிளிப்கார்ட் இஎம்ஐ ஈசி பய்யிங் வசதியையும் வழங்குகிறது. இதனுடன் ரூ.99 முதல் தொடங்கும் திரை சேத பாதுகாப்பான ஸ்க்ரீன் டேமேஜ் ப்ரொடெக்‌ஷன் வசதியும் பிளிப்கரட் பே லேட்டர் ஆப்ஷனும் (Flipkart Pay Later) பிளிப்கார்ட் மூலம் வழங்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | விற்பனையில் சாதனை படைத்த சியோமி... ஆச்சரியத்தில் பயனர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News