ஆப்பிளின் இந்த 6 அம்சங்கள் இந்தியாவில் செயல்படாது!

ஆப்பிள் வாலெட்டில் கார் சாவியை இணைப்பதன் மூலம் உங்கள் காரைப் லாக் செய்ய, அன்லாக் செய்ய அல்லது ஸ்டார்ட் செய்யமுடியும்.  

Written by - RK Spark | Last Updated : Apr 1, 2022, 03:31 PM IST
  • ஆப்பிள் நிறுவனம் பல புதிய தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது.
  • சில அம்சங்கள் சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.
  • இந்தியாவில் சில ஆப்பிள் அம்சங்கள் பயனர்களுக்கு கிடைப்பதில்லை.
ஆப்பிளின் இந்த 6 அம்சங்கள் இந்தியாவில் செயல்படாது! title=

ஆப்பிள் பே:

இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே கூகுள் பே தொடங்கப்பட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் அதன் கட்டணச் சேவையை இன்னும் இந்தியாவில் தொடங்கவில்லை.  ஆப்பிள் பே ஆனது ஐபோன், ஆப்பிள் வாட்ச், மேக் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் உள்ளது, ஆனால் இதனை தனி நபரால் பதிவிறக்கி கொள்ள முடியாது. மேலும் இந்தியாவில் இந்த சேவை இன்னும் தொடங்கப்படவில்லை.

apple

மேலும் படிக்க | iphone 13-ல் ரூ. 36,000-க்கும் அதிகமான தள்ளுபடி: க்ரோமாவின் அசத்தும் டீல்

ஆப்பிள் ஃபிட்னஸ்:

சந்தா செலுத்துவதன் மூலம் பயன்படுத்திக்கொள்ளும் இந்த சேவையானது ஆப்பிள் வாட்சில் உள்ளது.  இது ஃபிட்னஸ் சந்தாதாரர்களுக்கு புதிய உடற்பயிற்சி திட்டங்களை வழங்குகிறது.  18 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த சேவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேஷியா போன்ற பல நாடுகளில் கிடைத்தாலும், இன்னும் இந்த அம்சமானது இந்தியாவிற்கு கிடைக்கவில்லை.

AppleFitness

ஆப்பிள் வாலெட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற ஐடிகள்:

ஆப்பிள் ஆனது ஐஓஎஸ் 15.4 உடன் ஒரு புதிய அம்சத்தை ஐபோனில் அறிமுகப்படுத்தியது.  ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற ஐடிகளை பயனர்கள் அவர்களது ஆப்பிள் வாலெட்டில் சேமிக்க முடியும்.  இது ஐபோனில் உள்ள  எளிமையான அம்சம் இருப்பினும் இவை இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை.

ஆப்பிள் வாலெட்டில் கார் சாவியை இணைத்தல்:

உங்கள் கார் சாவியை ஆப்பிள் வாலெட்டில் இணைத்து பயன்படுத்தலாம்.  இதன்மூலம் உங்கள் காரைப் லாக் செய்ய, அன்லாக் செய்ய அல்லது ஸ்டார்ட் செய்யமுடியும்.  ஆப்பிள் நிறுவனம் இந்த அம்சத்தை முதன்முதலாக பிஎம்டபுள்யூ கார்களில் அறிமுகப்படுத்தியது.  இந்த அம்சம் இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை.

ஆப்பிள் நியூஸ்+:

சந்தா செலுத்தி பயன்படுத்தக்கூடிய ஆப்பிள் நியூஸ்+ ஆனது அதன் பயனர்களுக்கு ஐபோன், ஐபேட், மேக் போன்றவற்றில் உள்ள நூற்றுக்கணக்கான பத்திரிகைகள், செய்தித்தாள்கள் போன்றவற்றை பார்க்கும் அனுமதியை வழங்குகிறது.  இந்த ஆப்பிள் நியூஸ்+ ஆனது ஆஸ்திரேலியா, கனடா, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது, இது இந்தியாவில் கிடைக்கவில்லை.

​AppleNews

ஐபோனில் கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழைச் சேர்த்தல்:

இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் உங்களது கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை ஐபோன் அல்லது ஐபேட் டச்சில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.  இருப்பினும் இந்த அம்சம் தற்போது இந்தியாவில் கிடைக்கவில்லை. இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே கூகுள் பே தொடங்கப்பட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் அதன் கட்டணச் சேவையை இன்னும் இந்தியாவில் தொடங்கவில்லை.  ஆப்பிள் பே ஆனது ஐபோன், ஆப்பிள் வாட்ச், மேக் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் உள்ளது, ஆனால் இதனை தனி நபரால் பதிவிறக்கி கொள்ள முடியாது. 

மேலும் படிக்க | மொபைல் நெட்வொர்க் இல்லாதபோது என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News