Tata Neu டாடா நிறுவனத்தின் ஒற்றை செயலியில் கார் முதல் விமானப் பயணம் வரை

டாடா குழுமத்தின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் வழங்கும் Tata Neu APP ஏப்ரல் ஏழாம் தேதியன்று அறிமுகமாகிறது. இது தடையற்ற ஷாப்பிங் மற்றும் கட்டண அனுபவத்திற்கான ஒரே செயலியாக இருக்கும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 4, 2022, 04:27 PM IST
  • டாடாவின் சூப்பர் செயலி ஏப்ரல் 7 ஆம் தேதி
  • டாடா குழுமத்தின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் வழங்கும் Tata Neu
  • Tata Neu செயலி மூலம் தடையற்ற ஷாப்பிங் அனுபவத்தை பெறலாம்
Tata Neu டாடா நிறுவனத்தின் ஒற்றை செயலியில் கார் முதல் விமானப் பயணம் வரை title=

புதுடெல்லி: டாடா குழுமம், அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் செயலியான நியூவை ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தும். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். 

இந்த செயலியை டாடா குழுமம் அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய நோக்கம், நிறுவனத்தின் டிஜிட்டல் (Tata Digital) பிரிவை வளர்ப்பதாகும், இதனால் சந்தையில் ஏற்கனவே இருக்கும் Amazon, Flipkart மற்றும் Reliance Group இன் JioMart போன்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை டாடா கொடுக்க முடியும்.  

டாடாவின் நியூ செயலி, விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், மருந்துகள் மற்றும் மளிகைப் பொருட்களை ஒரே தளத்தில் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. Tata Neu செயலி இடைமுகத்தின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. டார்க் தீமுடன், பல செயலிகள் இதில் காணப்படுகின்றன. 

மேலும் படிக்க | சிம்கார்டு மூலம் கொள்ளை - எச்சரிக்கையாக இருப்பது எப்படி

இந்த செயலியின் மூலம் ஒரு காரையும் முன்பதிவு செய்யலாம்.  “பிரத்தியேக சலுகைகள், பலன்கள் மற்றும் சலுகைகள் நிரம்பிய Tata Neu இன் தடையற்ற ஷாப்பிங் மற்றும் பணம் செலுத்தும் அனுபவத்திற்கான ஒரே செயலி இது" என்று நிறுவனம் கூறுகிறது.  

tata

Tata Neu செயலியின் அம்சங்கள்:
Tata Neu app, பிரத்யேக சலுகைகள், பலன்கள் மற்றும் பல புதுமையான விஷயங்களைக் கொண்டதாக இருக்கும். இது தடையற்ற ஷாப்பிங் மற்றும் கட்டண அனுபவத்திற்கான ஒரே செயலியாக இருக்கும்.

Tata Payஐப் பயன்படுத்தி ஆன்லைன் மற்றும் ஸ்டோரில் வாங்கும் பில்களுக்கு உடனடியாக பணம் செலுத்தலாம். Play Store இல் கிடைக்கும் தகவலின்படி, Tata Neu செயலி. பயனர்கள் ஷாப்பிங் செய்யும் ஒவ்வொரு முறையும், விமானங்கள் மற்றும் ஹோட்டல்களை முன்பதிவு செய்வது போன்றவற்றுக்கு வெகுமதி பாயிண்டுகளை அளிக்கிறது. 

 

 

செய்யப்படும் செலவினங்களுக்காக, Tata Neu ஆப்ஸ் Neu Coins வடிவில் வெகுமதிகளை வழங்குகிறது, அதை மற்ற சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

"மளிகை சாமான்கள், கேஜெட்டுகள் உட்பட, டாடா நியூவில் பல தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளலாம். Tata Payஐப் பயன்படுத்தி உங்களின் ஆன்லைன் மற்றும் ஸ்டோரில் வாங்குதல்கள், பில்கள் மற்றும் பலவற்றுக்கு உடனடியாகப் பணம் செலுத்தலாம்” என்று டாடா தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஹோண்டா பம்பர் ஆபர்: குறைவான விலையில் கிடைக்கும் கார்கள்

டாடாவின் சூப்பர் ஆப் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, டாடா ஸ்டீல் ஊழியர்களுக்கு மட்டு வழங்கப்பட்டது.

கூடுதலாக, சூப்பர் ஆப்ஸின் விளம்பரத்திற்காக, டாடா ஸ்டீல் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் 1000-1000 சூப்பர் நியோ நாணயங்களை வழங்கியது, இதன் உதவியுடன் டாடா ஸ்டீல் ஊழியர்கள் ஆப்பில் இருந்து எந்த பொருளையும் வாங்கலாம்.

டாடாவின் புதிய செயலி அறிமுக அறிவிப்பு வெளியான பிறகு பலரும் அதை எதிர்நோக்கத் தொடங்கிவிட்டார்கள்.  Amazon, Flipkart மற்றும் Reliance Group இன் JioMart போன்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கவிருக்கிறது டாடா.

மேலும் படிக்க | பம்பர் ஆபர்! ரூ.5000 வரை விலைகுறைந்தது இந்த Samsung போன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News