அவ்வப்போது, நாம் நமது போனை பல காரணங்களுக்காக மாற்றுகிறோம். அப்போது, ஒரு போனில் உள்ள டேட்டாக்களை அதாவது தரவுகளை புதிய போனுக்கு மாற்ற வேண்டும். அதிலும், ஐபோனை விட்டுவிட்டு ஆண்ட்ராய்டு போனுக்கு மாறினால், உங்கள் வாட்ஸ்அப் அரட்டைகள் நீக்கப்படுமா அல்லது அதற்கு என்ன நடக்கும் என்று கவலை எழும். ஆனால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இப்போது உங்கள் பழைய மொபைலில் இருந்து புதிய மொபைலுக்கு அனைத்து அரட்டைகளையும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப், உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலி மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வேலை செய்கிறது. ஐபோன் பயனர்கள் ஆப்பிள் ப்ளே ஸ்டோரிலிருந்து வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஆண்ட்ராய்டுக்கான இந்த பயன்பாடு Google Play Store இல் கிடைக்கிறது.
வாட்ஸ்அப் தரவுகள் மற்றும் செய்திகளை வேறொரு போனுக்கு மாற்றுவது எப்படி?
முதலில், ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு என்னவெல்லாம் மாற்றப்படும் என்பதை தெரிந்துக் கொள்வோம். உங்களுடைய சாட்டிங் (அரட்டைகள்), குழு அரட்டைகள், மீடியா கோப்புகள் (புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை), சுயவிவரப் புகைப்படங்கள், வாட்ஸ்அப் சேனல் புதுப்பிப்புகள் அனைத்தும் மாற்றப்படலாம். ஆனால் உங்கள் வாட்ஸ்அப் கால் வரலாறு, நிலை புதுப்பிப்புகள் மற்றும் வேறு சில விஷயங்கள் மாற்றப்படாது.
மேலும் படிக்க | BSNL-க்கு உயிர் கொடுக்கும் மத்திய அரசு... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!
வாட்ஸ்அப் தரவுகள், தகவல்களை மாற்ற தேவையானவைகள்
1. உங்கள் புதிய ஆண்ட்ராய்டு ஃபோன். அது, சாம்சங், கூகுள் பிக்சல் அல்லது ஏதேனும் ஆண்ட்ராய்டு 12 ஃபோனாக இருக்கலாம்
2. iPhone மற்றும் Android ஃபோன்களை இணைக்க யூஎஸ்பி-சி (USB-C) கேபிள் தேவை
3. இரண்டு போன்களும் ஒரே எண்ணைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது
4. வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பு இரண்டு போன்களிலும் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் படிக்க | வாட்ஸ்அப் ஸ்பேம் மெசேஜ் தொல்லை இனி இருக்காது... வருகிறது புதிய அம்சம்
தரவுகளை மாற்றுவது எப்படி?
1. உங்கள் iPhone இல் உள்ள App Store இலிருந்து WhatsApp இன் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கவும்.
2. புதிய ஆண்ட்ராய்டு மொபைலில், "தரவை மீட்டமை" விருப்பம் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
3. "செயலிகள் மற்றும் தரவை நகலெடு" தோன்றும் போது, இரண்டு போன்களையும் யூஎஸ்பி-சி (USB-C) கேபிளுடன் இணைக்கவும்.
4. ஐபோனில் "ட்ரஸ்ட்" விருப்பம் தோன்றினால், அதைத் தட்டவும்.
5. தரவுகள் பரிமாற்றத்தை முடிக்க திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
6. இந்த முழு செயல்பாட்டின் போது உங்கள் ஐபோன் திறக்கப்பட்டிருக்கும்
7. ஆண்ட்ராய்ட் போனில் தெரியும் QR குறியீட்டை ஐபோன் கேமரா மூலம் ஸ்கேன் செய்யவும்.
8. ஆண்ட்ராய்டு போனில் "ஸ்டார்ட்" என்ற ஆப்ஷனைத் தட்டவும்.
9. தரவு மற்றும் தகவல் புதிய போனுக்கு மாற்றப்பட்டவுடன் யூஎஸ்பி-சி (USB-C) கேபிள் இணைப்பை நீக்கிவிடவும்
10. உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
11. உங்கள் பழைய தொலைபேசி எண்ணைக் கொண்டு உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும்.
12. உங்கள் பழைய போனில் இருந்த வாட்ஸ்-அப் சாட்டிங்கை அப்படியேத் தொடர "தொடங்கு" விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ