Realme 8s 5G: அதிரடியான தள்ளுபடியுடன் வாங்க சூப்பர் வாய்ப்பு, முந்துங்கள்

Realme 8s 5G ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையை நிறுவனம் இன்று அதாவது செப்டம்பர் 13 அன்று தொடங்குகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 13, 2021, 02:35 PM IST
  • Realme 8s 5G ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • Realme ஸ்மார்ட்போன் Flipkart மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.
  • ரியல்மி 8 எஸ் 5 ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Realme UI 2.0 இல் இயங்குகிறது.
Realme 8s 5G: அதிரடியான தள்ளுபடியுடன் வாங்க சூப்பர் வாய்ப்பு, முந்துங்கள் title=

Realme 8s 5G smartphone first Sale: Realme 8s 5G ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையை நிறுவனம் இன்று அதாவது செப்டம்பர் 13 அன்று தொடங்குகிறது. நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை Realme 8i உடன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது.

இன்று Realme 8s இன் முதல் விற்பனை நண்பகல் 12 மணிக்கு Flipkart மற்றும் Realme.com இல் தொடங்கியது. நீங்கள் அதை ஆன்லைனிலும் பல ஆஃப்லைன் விற்பனையாளர்களிடமிருந்தும் வாங்கலாம். இந்த ரியல்மி சாதனத்தை தள்ளுபடியில் வங்கி சலுகைகளுடன் வாங்கலாம். இதில் 5000mAh பேட்டரி, மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 64MP பிரதான கேமரா ஆகியவை உள்ளன.

Realme 8s 5G: இந்திய விலை

முதல் முறையாக, இந்த Realme ஸ்மார்ட்போன் Flipkart மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனை பல ஆஃப்லைன் விற்பனையாளர்களிடமும் வாங்கலாம். இந்த போனை (Realme 8s 5G Smartphone price in India) இந்தியாவில் ரூ .17,999 க்கு வாங்கலாம். இது போனின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வகைக்கான விலை ஆகும்.

இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ .19,999 ஆகும். இது இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யுனிவர்ஸ் ப்ளூ மற்றும் யுனிவர்ஸ் பர்பிள் ஷேட் ஆகியவை இதில் கிடைக்கக்கூடிய இரு வண்ணங்களாகும். நிறுவனம் இந்த போனில் வங்கி சலுகைகளையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள், இந்த போனை எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்ட் மூலம் ரூ .1500 தள்ளுபடியில் வாங்கலாம். மேலும் டெபிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளிலும் சலுகை கிடைக்கும்.

ALSO READ: Flipkart Big Billion Days Sale அறிவிப்பு; செம்ம தள்ளுபடி

Realme 8s 5G: விவரக்குறிப்புகள்

ரியல்மி 8 எஸ் 5 ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Realme UI 2.0 இல் இயங்குகிறது. (Realme 8s 5G Smartphone Specifications) இதில் 1,080 × 2,400 பிக்சல்கள் ரெசல்யூஷன் கிடைக்கிறது. இதன் டிஸ்ப்ளே full-HD+ உடன் 6.5 இன்ச் கொண்டுள்ளது. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதமும் இதில் கிடைக்கிறது. Realme 8 இல் MediaTek Dimensity 810 செயலி கொடுக்கப்பட்டுள்ளது. இது 8GB வரை ரேம் ஆப்ஷனுடன் வருகிறது. ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இந்த தொலைபேசி 128GB-யின் UFS 2.1-ஐக் கொண்டுள்ளது. ஸ்டோரேஜ் வசதியை அதிகரிக்க, மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் 1TB வரை விரிவாக்கப்படலாம்.

Realme 8s 5G கேமரா

கேமராவின் அம்சங்களைப் பற்றி பேசுகையில், Realme 8s 5G ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு கிடைக்கிறது. இதன் முக்கிய லென்ஸ் 64MP கொண்டுள்ளது.  (Realme 8s 5G Smartphone Camera) இது தவிர, 2 எம்பி மோனோக்ரோம் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகியவை போனில் கொடுக்கப்பட்டுள்ளன.

முன் கேமராவைப் பற்றி பேசுகையில், இது 16 எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. பவர் பேக் அப்-பிற்காக, இது 5000mAH பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இதில் 5G, 4G VoLTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் v5.1, GPS / A-GPS மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளன. பாதுகாப்பு அம்சத்திற்காக, இந்த போனில் (Smartphone) பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரும் உள்ளது.

ALSO READ: Amazon அதிரடி: வெறும் ரூ. 649-க்கு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன், முந்துங்கள்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News